தனியார் செல்போன் நிறுவனத்தில் சோதனை
சென்னை அருகே செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.;
சென்னை அருகே செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. 5 நாட்களுக்கு முன்பு இதே நிறுவனத்தில், தங்கும் விடுதியில் தரமற்ற உணவுகள் வழங்கப்பட்டதாக கூறி, பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழ்நிலையில், இந்த நிறுவனம் மீது வரி ஏய்ப்பு புகாரும் சேர்ந்ததால், 15க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று பிற்பகல் 3 மணிக்கு துவங்கிய சோதனை நள்ளிரவிலும் நீடித்தது. அடுத்தடுத்து நிகழும் சம்பவங்களால் இந்த பகுதி கடந்த சில தினங்களாகவே மர்ம பகுதியாக மாறியுள்ளது.