நகைகளை வாங்கி ஏமாற்றியதாக கேரள பெண் புகார் - விஜயபாஸ்கரிடம் அமலாக்கத்துறை விசாரணை

கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கொச்சியில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-11-29 11:41 GMT
கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கொச்சியில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஷர்மிளா என்ற பெண் புகார் அளித்திருந்தார். கேரளாவை சேர்ந்த இவர், இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை விஜயபாஸ்கர் தன்னிடம் இருந்து பெற்று ஏமாற்றியதாக புகார் அளித்திருந்தார். இதன்பேரில் கேரளாவின் அங்கமாலி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஷர்மிளா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கேரள மாநிலம் கொச்சியில் அமலாக்கத்துறை முன்பாக விஜயபாஸ்கர் ஆஜராகினார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்