பல்வேறு பகுதிகளில் கனமழை.. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.;
பல்வேறு பகுதிகளில் கனமழை.. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, செய்துங்கநல்லூர், கருங்குளம், சாத்தான்குளம் உள்பட பல பகுதிகளில் சுமார் 5 மணி நேரமாக பலத்த மழை பெய்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.நெல்லையில், வண்ணாரப்பேட்டை பாளையங்கோட்டை சமாதானபுரம் கேடிசி நகர் மேலப்பாளையம் பெருமாள்புரம் என, நகர் முழுவதும், கன மழை கொட்டித் தீர்த்தது.உளுந்தூர்பேட்டையில் ஒரு மணி நேரம் இடைவிடாது கனமழை வெளுத்து வாங்கியது.பேரூராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் கழிவுநீர் வாய்க்கால்கள் நிரம்பி மழை நீரோடு கலந்து வீதியில் ஓடின.