செயின் பறிப்பில் ஈடுபட முயன்ற 2 பேர்: தர்ம அடி கொடுத்த மக்கள் - பரபரப்பு
சாத்தான்குளத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை பிடித்த கிராம மக்கள் தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
சாத்தான்குளத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை பிடித்த கிராம மக்கள் தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டு வேலை பார்த்து வரும் புஷ்பலதா என்ற பெண், சாலையில் நடந்து வந்த போது திடீரென இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்தவர்கள் அவர் அணிந்திருந்த செயினை பிடித்து இழுத்தனர். அதற்குள் சுதாரித்துக் கொண்ட அந்த பெண் கூச்சலிடவே, அருகிலிருந்தவர்கள் வேகமாக வந்து கொள்ளையர்களை பிடித்தனர். பின்னர் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.