"மதுரவாயல்-வாலாஜா நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டது" - உயர் நீதிமன்றத்தில் நெடுஞ்சாலைத்துறை தகவல்

மதுரவாயல் - வாலாஜா நெடுஞ்சாலையை சீரமைக்கும் வரை அங்குள்ள 2 சுங்கச்சாவடிகளில் 50 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என 2019ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.;

Update: 2021-10-06 07:13 GMT
இதனால் கடந்த 2 ஆண்டுகளாக அங்கு 50 சதவீத சுங்ககட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மதுரவாயல்-வாலாஜா இடையிலான நெடுஞ்சாலை தற்போது சீரமைக்கப்பட்டு விட்டதாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,  வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். இதனால்  இனி 100 சதவீத சுங்க கட்டணம் வசூலிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்