நீர்நிலை ஆக்கிரமிப்பு - நீதிமன்றம் வேதனை

பக்கிங்காம் கால்வாயை முறையாக சீர்படுத்தவில்லை என்றால் வரலாற்று புத்தகத்தில் மட்டும் கால்வாய் பற்றிய பதிவுகள் இருக்கும் என உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

Update: 2021-09-14 13:21 GMT
பக்கிங்காம் கால்வாயை முறையாக சீர்படுத்தவில்லை என்றால் வரலாற்று புத்தகத்தில் மட்டும் கால்வாய் பற்றிய பதிவுகள்  இருக்கும் என உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.மாதவரம் கிராமத்தில் உள்ள 1 புள்ளி17 ஹெக்டேர் பரப்பிலான  ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி அதனை பாதுகாக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சுதர்சனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு,  மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக, மாநகராட்சிக்கு  புதிதாக மனு அளிக்கவும், அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.மேலும், நீர்நிலைகளை சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள்,சென்னையில் மொத்தம் எத்தனை நீர் நிலைகள் உள்ளன? என மாநகராட்சி  தரப்புக்கு  கேள்வி எழுப்பினர். பக்கிங்காம் கால்வாயை ஏன் சீர்படுத்தவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அது ஒரு சிறந்த நீர்வழி போக்குவரத்திற்கான கால்வாய் என்றும் இதனை முறையாக சீர்படுத்தவில்லை என்றால், வரலாற்று புத்தகத்தில் மட்டுமே கால்வாய் பற்றிய பதிவுகள்  இருக்கும் என்றும் வேதனை தெரிவித்தனர். நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டுமென்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்