"இளைஞர்களை உற்சாகப்படுத்தும் முதல்வர்" - எஸ்.ஆர். ராஜா கருத்து

உடற்பயிற்சி மற்றும் சைக்கிளிங் செய்து முதலமைச்சர் இளைஞர்களை உற்சாகப்படுத்தவதாக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் ராஜா பேரவையில் தெரிவித்தார்.;

Update: 2021-09-03 10:17 GMT
விளையாட்டுத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அவர், சென்னையில் இருப்பதைப் போல, புறநகர் பகுியில், உள்விளையாட்டு அரங்கம், துப்பாக்கி பயிற்சி மையம் போன்ற பல வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மெய்யநாதன், தாம்பரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மைதானம் அமைக்க ஏதுவான நிலம் கண்டறியப்பட்டு கொடுக்கப்பட்டால், தரமான மைதானம் அமைக்கப்படும் எனவும், சென்னை புறநகர் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மைதானங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்