ஆயுதங்களால் மோதிக் கொண்ட மீனவர்கள் - துப்பாக்கி சூடு நடத்தி கலைத்த போலீசார்

ஆயுதங்களால் மோதிக் கொண்ட மீனவர்கள் - துப்பாக்கி சூடு நடத்தி கலைத்த போலீசார்;

Update: 2021-08-28 11:40 GMT
ஆயுதங்களால் மோதிக் கொண்ட மீனவர்கள் - துப்பாக்கி சூடு நடத்தி கலைத்த போலீசார் 

புதுச்சேரியில் சுருக்குமடி வலையை பயன்படுத்தியதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.புதுச்சேரி மாநிலம் நல்லவாடு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சுருக்கு மடி வலையை பயன்படுத்தி நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கேயே மீன்பிடித்துக் கொண்டிருந்த வீராம்பட்டினம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை வெடித்தது. இந்த விவகாரம் ஊரில் இருப்பவர்களுக்கும் தெரியவரவே, இரு தரப்பும் ஆயுதங்களை வைத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது சம்பவ இடத்தில் இருந்த  போலீசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் நோக்கில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் 2 முறை சுட்டனர். அதன்பின்னரே அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மீனவ கிராமங்களுக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்