"மரியாதை நிமித்தமாகவே அமித்ஷாவை சந்தித்தோம்" - எடப்பாடி பழனிசாமி
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அரசியல் சார்ந்த விசயங்கள் பேசவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.;
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அரசியல் சார்ந்த விசயங்கள் பேசவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்சல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவினை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித் ஷாவினை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தாக தெரிவித்தார்.