பரோலில் விடுவிக்க கோரிய வழக்கு : "சிறையில் இருந்த மொத்த காலத்தை கணக்கிடுக" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்கும் போது, விசாரணை கைதியாக சிறையில் இருந்த காலத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2021-06-11 03:10 GMT
பரோலில் விடுவிக்க கோரிய வழக்கு : "சிறையில் இருந்த மொத்த காலத்தை கணக்கிடுக" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

தண்டனை கைதிகளுக்கு பரோல்  வழங்கும் போது, விசாரணை கைதியாக சிறையில் இருந்த காலத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கடந்த 2016ம் ஆண்டு போதை  பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது அலி என்பவருக்கு, 2019 ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த நீதிமன்றம்,10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த‌து.2016 ஆம் ஆண்டு  கைது செய்யபட்டது முதல் தொடர் சிறைவாசம் அனுபவித்து வரும் முகமது அலி,  பரோல் கேட்டு புழல் சிறை நிர்வாகத்துக்கு விண்ணப்பித்தார்.சிறைவிதிப்படி மூன்று ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பிறகுதான் ஒரு மாத கால சாதாரண விடுப்பிற்கு தகுதி பெறுவார்கள் எனக் கூறி, இந்த விண்ணப்பத்தை மத்திய சிறைக்கண்காணிப்பாளர் நிராகரித்துள்ளார்.இதை எதிர்த்து, முகமது அலி சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.என்.மஞ்சுளா அமர்வு, தண்டனை கைதிகளின் பரோல்  தொடர்பான கோரிக்கைகளை பரிசீலிக்கும் போது,  விசாரணை கைதியாக அவர்கள் சிறையில் இருந்த காலத்தையும் கணக்கில் கொள்ள செய்யவேண்டும் என அறிவுறுத்தியது.புழல் சிறை கண்காணிப்பாளரின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள்,  மனுதரார் கோரிக்கை தொடர்பான ஆவணங்களை நான்கு வாரத்திற்குள் மாநில அரசிற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், அதனடிப்படையில் மாநில அரசு நான்கு வார காலத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்