அரிய வகை நோயால் அவதிப்படும் சிறுவன்; சிகிச்சை அளிக்க உத்தரவிடுங்கள் - அரசுக்கு பெற்றோர் கண்ணீர் கோரிக்கை

அரிய வகை நோயால் அவதிப்பட்டு வரும் தங்களது மகனுக்கு உரிய சிகிச்சை வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கண்ணீர் மல்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-06-04 05:19 GMT
அரிய வகை நோயால் அவதிப்பட்டு வரும் தங்களது மகனுக்கு உரிய சிகிச்சை வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கண்ணீர் மல்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை திருவொற்றியூரை சேர்ந்த வினோத் என்பவரின் ஐந்து வயதான மகன் எபினேசருக்கு, முகத்தின் கீழ் தாடையில் கட்டி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம், மருத்துவர்கள் கட்டியை அகற்றினர். இந்நிலையில் மீண்டும் சிறுவன் எபினேசருக்கு, கட்டிகள் வளர்ந்து வரும் நிலையில், கொரோனா பரவலை காரணம் காட்டி, சிகிச்சைக்கு மறுப்பதால் பெற்றோர் கவலைக்குள்ளாகி உள்ளனர். இதனால் உரிய சிகிச்சை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்