கொரோனா முழு ஊரடங்கு எதிரொலி - ரோஜாவை தீயிட்டு எரித்து வரும் விவசாயிகள்

ஒசூர் பகுதிகளில் கொரோனா ஊரடங்கு காரணமாக ரோஜா மலர்களை விவசாயிகள் தீயிட்டு எரித்து வருகின்றனர்.

Update: 2021-05-27 07:35 GMT
ஒசூர் பகுதிகளில் கொரோனா ஊரடங்கு காரணமாக ரோஜா மலர்களை விவசாயிகள் தீயிட்டு எரித்து வருகின்றனர். ஒசூர் பகுதிகளில் பசுமை குடில்களில் பல லட்சம் செலவு செய்து விவசாயிகள், சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் ரோஜா மலர்கள் உற்பத்தி செய்துள்ளனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ரோஜா மலர்கள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரோஜா மலர்கள் வீணாகி வருவதால், விவசாயிகள் அதை தீயிட்டு எரித்து வருகின்றனர். இதனால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை அடைந்துள்ள விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்