கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை - தமிழக அரசு நடவடிக்கை

கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்த 5,000 டோஸ் மருந்துகளை வாங்க தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.;

Update: 2021-05-22 11:53 GMT
கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை - தமிழக அரசு நடவடிக்கை  

கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்த 5,000  டோஸ் மருந்துகளை வாங்க தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், பலர் அண்மைக் காலமாக கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று ருகின்றனர். வடமாநிலங்களில் மட்டுமே கண்டறியபட்டு வந்த கருப்பு பூஞ்சை தொற்று தற்போது தமிழகத்திலும் ஆங்காங்கே பலரை தாக்கி வருகிறது. இந்நிலையில், இந்த சிகிச்சைக்கான மருந்தின் தேவை அதிகரித்துள்ளது.
இதற்கு, ஆம்போடெரிசின் - பி என்ற மருந்து பயன்பட்டு வரும் நிலையில்,  முதற்கட்டமாக    5000 டோஸ் மருந்துகளை வாங்க தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உத்தரவிட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்