1 மணி நேரத்தில் 140 மெ.டன் ஆக்ஸிஜன் உற்பத்தி : இயந்திரத்தை சீரமைக்க உத்தரவிடக்கோரி வழக்கு... வழக்கை ஒத்திவைத்த தலைமை நீதிபதி அமர்வு

திருச்சி பெல் நிறுவனத்தில் ஒரு மணி நேரத்தில் 140 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தயாரிக்கக் கூடிய இயந்திரத்தை சரி செய்யக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதில் அளிப்பதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

Update: 2021-05-13 02:13 GMT
1 மணி நேரத்தில் 140 மெ.டன் ஆக்ஸிஜன் உற்பத்தி : இயந்திரத்தை சீரமைக்க உத்தரவிடக்கோரி வழக்கு... வழக்கை ஒத்திவைத்த தலைமை நீதிபதி அமர்வு 


திருச்சி பெல் நிறுவனத்தில் ஒரு மணி நேரத்தில் 140 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தயாரிக்கக் கூடிய இயந்திரத்தை சரி செய்யக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதில் அளிப்பதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த வெரோனிகா மேரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் பதில் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணை மே 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்