இலங்கையில் தமிழர்களின் நிலம் பறிப்பு" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்

இலங்கையில் தமிழர்களின் நிலம் பறிப்பு" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்

Update: 2021-04-18 13:44 GMT
இலங்கையில் தமிழர்களின் நிலம் பறிப்பு" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் 

இலங்கையில் தமிழர்களின் நிலங்களை அந்நாட்டு அரசு பறிப்பதாக குற்றம்சாட்டியுள்ள மதிமுக பொது செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பகுதியில் தமிழ் விவசாயிகளின் நிலங்களில், இலங்கை வனத்துறையினர் திடீரென எல்லை கற்களை கொண்டு வந்து நட்டு, அவை எல்லாம் வனப்பகுதிகள் என அறிவிப்பு செய்து இருப்பதாகவும், அந்த இடங்களை விட்டு தமிழர்கள் வெளியேற வேண்டும் என மிரட்டப்படுவதாகவும் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கையை  இந்திய அரசும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்