குடிபோதையில் தகராறு செய்த மகனால் ஆத்திரம் - மற்றொரு மகனுடன் சேர்ந்து கொலை செய்யும் தாய்

கடலூர் அருகே குடித்து விட்டு வந்து தகராறு செய்த மகனை தாயும், சகோதரனும் சேர்ந்து அடித்தே கொன்ற சிசிடிவி காட்சிகள் பார்ப்போரை பதற வைக்கிறது.;

Update: 2021-02-10 11:04 GMT
கடலூர் அருகே குடித்து விட்டு வந்து தகராறு செய்த மகனை தாயும், சகோதரனும் சேர்ந்து அடித்தே கொன்ற சிசிடிவி காட்சிகள் பார்ப்போரை பதற வைக்கிறது.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வானகரம் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். 40 வயதான இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். குடிபோதைக்கு அடிமையான இவர், தொடர்ந்து மது குடித்துவிட்டு வந்து பெண்களிடமும் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததால் குடும்பத்தில் அனைவரும் அவமானத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கரின் தாய் குப்பாயி, தன் மற்றொரு மகன் பிரபாகரனுடன் சேர்ந்து கொலை திட்டம் தீட்டினார். சம்பவத்தன்று பாஸ்கரின் கழுத்தை கம்பியால் கட்டி இழுத்துச் சென்ற அவர், கையில் வைத்திருந்த கட்டையால் அடித்தே கொலை செய்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொலை செய்த தாய் மற்றும் மகனை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

மேலும் செய்திகள்