மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.;

Update: 2020-10-29 12:50 GMT
மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மருத்துவக் கல்லூரி உறுப்பினராக டாக்டர் சண்முகம் சுப்பையா உட்பட 4 பேரை நேற்று மத்திய அரசு நியமித்தது. இந்நிலையில் டாக்டர் சண்முகம் சுப்பையா ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியவர். எனவே அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அவரது உருவ பொம்மையை செருப்பால் அடித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்