உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் - ஸ்டாலின்

அகில இந்திய அளவில், மருத்துவக் கல்விக்கான இடங்களில், 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-26 11:44 GMT
அகில இந்திய அளவில், மருத்துவக் கல்விக்கான இடங்களில், 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

50 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் அதிமுக அரசு  துணிச்சலுடன் வாதாடவில்லை என்று அவர் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதனால் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மாணவர்களின் மருத்துவக் கனவை அதிமுக கலைத்துள்ளதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

இரட்டை வேடம் போட்டு, கண் துடைப்பு நாடகம் நடத்தாமல், இந்த ஆண்டே இடஒதுக்கீட்டைப் பெற பிரதமருக்கு முதலமைச்சர் அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் இடஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தைப்,

பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகத்திற்காகவும் பிரதமர் காட்ட வேண்டும் என்று நாடு எதிர்பார்ப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்