அரசு அதிகாரிகள் ஊதியத்தைதாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்- நீதிபதிகள் ஆவேசம்

அரசு அதிகாரிகள் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.;

Update: 2020-10-15 12:11 GMT
அரசு அதிகாரிகள் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சென்னையை சேர்ந்த சூரிய பிரகாசம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு, நீதிபதிகள் கிருபாகரன் - புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதிகள், கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைக்கு தலா 40 ரூபாய் லஞ்சமாக அரசு அதிகாரிகள் பெறுவது வேதனை அளிப்பதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து தமிழக அரசு நாளை பதிலளிக்கவும் அவர்கள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்