"நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2020-09-18 09:06 GMT
கடந்த 13ஆம் தேதி நீட் தேர்வு நடந்த நிலையில் அதற்கு முந்தைய நாள் தமிழகத்தில் அடுத்தடுத்து 3 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் பலரும் கருத்து தெரிவித்த நிலையில் நடிகர் சூர்யாவும் தன் தரப்பு கருத்தை அறிக்கையாக வெளியிட்டார். 

கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது எனவும் நடிகர் சூர்யா தன் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். 

சூர்யாவின் இந்த கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என சுட்டிக்காட்டி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதினார். 
அதன் அடிப்படையில் நடிகர் சூர்யா அறிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு 
விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வு  விசாரணைக்கு பிறகு 25 பக்கம்  கொண்ட உத்தரவை அளித்தது. நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்