தேசிய கொடி அவமதிப்பு வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

தேசியக்கொடியை அவமதித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி சேகருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2020-09-16 16:33 GMT
தேசியக்கொடியை அவமதித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி சேகருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான புகார் மீதான விசாரணையின் போது, எஸ்.வி சேகர் சார்பில் வருத்தம் தெரிவித்து உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை காவல்துறையும் ஏற்றுக் கொண்டது. இதனால், எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார். தேவைப்படும் போது, மத்திய குற்றப் பிரிவு புலன் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என நீதிபதி  நிபந்தனை விதித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்