இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு

இந்தியன் 2 படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாயும், படுகாயமடைந்த ஒருவரின் குடும்பத்திற்கு 90 லட்ச ரூபாயும் நிதியுதவி வழங்கப்பட்டது.

Update: 2020-08-06 13:04 GMT
இந்தியன் 2 படப்பிடிப்பின் போது நிகழ்ந்த  விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாயும், படுகாயமடைந்த ஒருவரின் குடும்பத்திற்கு 90 லட்ச ரூபாயும் நிதியுதவி வழங்கப்பட்டது. படதயாரிப்பு நிறுவனம், நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் சங்கர் சார்பில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டது. சென்னை வடபழனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியுதவிக்கான காசோலைகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. அப்போது ஆர்.கே. செல்வமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் , படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து கசப்பான அனுபவம் என்றும், அதிலிருந்து பாடம் கற்றுகொண்டதாக தெரிவிதார். இது போன்ற விபத்துக்கள் இனி நிகழாமல் தவிர்க்கப்படும் என்று கூறினார். பாரதிராஜா புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், உதவி செய்ய யார் வந்தாலும் வரவேற்கதக்கது என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்