சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் மகேந்திரன் என்பவர் உயிரிழந்ததாக வழக்கு: சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம் - தமிழக அரசு தகவல்

சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் மகேந்திரன் என்பவர் உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.;

Update: 2020-07-21 12:33 GMT
இது தொடர்பாக மகேந்திரனின் தாயார் வடிவு தாக்கல் செய்த மனுவில், கொலை வழக்கு தொடர்பான விசாரணை என கூறி,  கடந்த மே 23 ஆம் தேதி, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ரகுகணேஷ் ஆகியோர், தனது இளையமகன் மகேந்திரனை அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதாக கூறப்பட்டுள்ளது.  2 நாள் சட்டவிரோத காவலில் வைத்து மகேந்திரன் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஜூன் 13ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மகனின் இறப்பு குறித்து முறையாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் வடிவு தனது மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கு விசாரணைக்கு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்