Navjot Kaur | 'முதல்வர் பதவிக்கு ரூ.500 கோடி' - சித்துவின் மனைவி கருத்தால் சலசலப்பு
'முதல்வர் பதவிக்கு ரூ.500 கோடி' - சித்துவின் மனைவி கருத்தால் சலசலப்பு
முதல்வர் பதவிக்கு 500 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் - அந்தப் பணம் தங்களிடம் இல்லை என சித்துவின் மனைவியும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நவ்ஜோத் கவுர் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சித்துவின் மனைவியான நவ்ஜோத் கவுர், பஞ்சாப் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அம்மாநில ஆளுநரை சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்தக் கட்சியாவது சித்துவுக்கு முதல்வர் பதவி கொடுத்தால், பஞ்சாப்பை மேம்படுத்துவோம் என்று தெரிவித்தார்.