விமான சேவை பாதிப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மொகோல் தெரிவித்துள்ளார். புதிய விமானப் பணி நேர வரம்பு விதிகளை மத்திய அரசு அண்மையில் அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து, பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு நாட்டின் பல இடங்களிலும் விமான சேவை பாதிக்கப்பட்டது. இண்டிகோ நிறுவனம், கடந்த 6 நாட்களில் மட்டும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகளை ரத்து செய்தது. இந்நிலையில், இப்பிரச்சினை தொடர்பாக 4 நபர் குழு விசாரித்து வருவதாகவும், அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முரளிதர் மொகோல் குறிப்பிட்டார்.