சித்த மருத்துவம்- அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.;

Update: 2020-07-09 11:08 GMT
கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், சித்த மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிப்பதாக வேதனை தெரிவித்தனர்.தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பிய  நீதிபதிகள், ஜூலை 23 ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்