இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% வழங்க திமுக மனு - அகில இந்திய ஒதுக்கீடு மூலம் வழங்குமாறு கோரிக்கை

தமிழக மருத்துவக் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டில், 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.

Update: 2020-06-12 02:59 GMT
தமிழக மருத்துவக் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டில், 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது. பொது மருத்துவம் , பல் மருத்துவம், மருத்துவ மேற்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், கலந்தாய்வு நடத்த தடை கோரிய திமுக, அந்த முடிவுகளை ரத்து செய்து, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீதத்தை வழங்குமாறு கோரியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்துள்ள மனுவில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள இடங்களில், 15 சதவீத இடங்களையும், மருத்துவ மேற்படிப்புக்களுக்கான இடங்களில் 50 சதவீதத்தையும் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என கோரியுள்ளது. தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளதாகவும், இதில், 50 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள திமுகவின் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்