வன விலங்குகளை துன்புறுத்திய விவகாரம் : ரூ. 70,000 அபராதம் - வனத்துறை நடவடிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையில் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளை துன்புறுத்தியதாக இளைஞருக்கு 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வனத்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

Update: 2020-06-10 02:46 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையில் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளை துன்புறுத்தியதாக இளைஞருக்கு 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வனத்துறையினர் எச்சரித்து அனுப்பினர். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அணைக்கரை பட்டியைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவர் டிராக்டர் மூலம் மணல் அள்ளிய நிலையில் வனத்திற்குள் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளை  துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறையினர் எச்சரிக்கை செய்து அனுப்பினர்
Tags:    

மேலும் செய்திகள்