ஓமனில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானம் : 169 பேர் சென்னை அழைத்து வரப்பட்டனர்
கொரோனா ஊரடங்கால் ஓமன் நாட்டில் சிக்கிய 169 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.;
கொரோனா ஊரடங்கால் ஓமன் நாட்டில் சிக்கிய 169 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்களை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்து, சுகாதார துறை சார்பில் அவர்களிடம் இருந்து கொரோனா பரிசோதனைக்காக சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதை தொடர்ந்து, ஒட்டல்களில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டனர். தனிமைபடுத்தலுக்கு பின் அனைவரும் சொந்த ஊர் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.