ஊரடங்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு

ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Update: 2020-05-30 16:59 GMT
ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை  மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தடை செய்யப்பட்ட பகுதி தவிர பிற  பகுதிகளில் ஒரு மாதத்திற்கான வழிகாட்டுதல் அறிவிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் ஜூன் 8ஆம் தேதிக்குப் பிறகு திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


பள்ளி - கல்லூரிகள் திறப்பு எப்போது?


மத்திய அரசுடன் கலந்து ஆலோசனை செய்த பிறகு பள்ளி - கல்லூரிகளைத் திறக்கலாம் என, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. மத்திய அரசின் அனுமதி பெற்ற பிறகு, ஜூலை மாதம் கல்வி நிறுவனங்கள் திறப்பது குறித்து முடிவெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி என்றும், அதிக எண்ணிக்கையில் கூடுவது தடை செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதியோர், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு
உட்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்