ஊரடங்கு - வாழ்வாதாரத்தை இழந்த நடத்துனர் - சாலையோர பழக்கடை அமைத்து வியாபாரம்

சீர்காழியை அடுத்த கீராநல்லூர் கிராமத்தை சேர்ந்த பாபு 10 ஆண்டுகளாக தனியார் பேருந்து நடததுனராக பணிபுரிந்து வருகிறார்.

Update: 2020-05-26 02:43 GMT
சீர்காழியை அடுத்த  கீராநல்லூர் கிராமத்தை சேர்ந்த பாபு 10 ஆண்டுகளாக தனியார் பேருந்து நடததுனராக பணிபுரிந்து வருகிறார். ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்த அவர், குடும்பத்தின் வறுமையை போக்க மாற்று தொழில் செய்ய முடிவெடுத்தார். அதன்படி சீர்காழி நகரின் சாலையோரம்  தள்ளுவண்டி அமைத்து பழ விற்பனை செய்ய துவங்கியுள்ளார். இதன் மூலம் தனது குடும்பத்தின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடிவதாக அவர் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்