"குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் கோரும் உரிமை உண்டு" - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ளவர்களுக்கு ஜாமீன் வழங்கவதற்கு, கொரோனா விடுமுறையை காரணம் காட்ட முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Update: 2020-05-13 02:48 GMT
பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ளவர்களுக்கு ஜாமீன் வழங்கவதற்கு, கொரோனா  விடுமுறையை காரணம் காட்ட முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள அதலியூரை சேர்ந்தவர் சேட்டு நகை பறிப்பு 
வழக்கில் கைதாகி, 90 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்து வரும் நிலையில், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.  இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,10 ஆண்டுக்கு குறைவான தண்டனை பெறக்கூடிய வழக்குகளில் 60 நாட்களிலும், 10 ஆண்டுக்கு அதிகமாக தண்டனை பெறும் வழக்குகளில் 90 நாட்களிலும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், ஜாமீன் கோரும் உரிமை உண்டு என உத்தரவிட்டு, ஜாமீன் வழங்கினார்.


Tags:    

மேலும் செய்திகள்