"சரக்கு வாகனங்களுக்கு நுழைவு சீட்டு தேவையில்லை" - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

சரக்குகள் ஏற்றி செல்லும் வாகனங்கள், எந்த வித தடையுமின்றி அனுமதிக்கப்படுவதை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்ய மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.;

Update: 2020-05-01 02:27 GMT
மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் போது, சரக்கு வாகனங்கள் எளிதாக அனுமதிக்கப்படுவதில்லை என்றும், உள்ளூர் அதிகாரிகள் நுழைவு சீட்டு கேட்பதாகவும் புகார்கள் வருவதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி சரக்கு வாகனங்களுக்கு நுழைவு சீட்டு தேவையில்லை என கூறியுள்ள மத்திய அரசு, அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க, சரக்கு வாகனங்களை அனுமதிக்க வேண்டியது கட்டாயம் என குறிப்பிட்டுள்ளது. எனவே, சரக்கு வாகனங்கள் சிக்கலின்றி மாநிலங்களுக்குள் அனுமதிக்கப்படுவதை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்