மருந்துகளை பொதுமக்களின் வீட்டிற்கே சென்று வழங்க தமிழக அரசு நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்

வீட்டில் இருந்த படியே, மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை பெற வசதியாக இலவச தொலைபேசி எண்ணை, அரசு அறிமுகம் செய்துள்ளது.

Update: 2020-04-13 16:32 GMT
வீட்டில் இருந்த படியே, மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை பெற வசதியாக இலவச தொலைபேசி எண்ணை, அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான சேவையை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் சென்னையில் 3 ஆயிரம் மருந்துக்கடைகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சேவையானது விரைவில் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்று, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம், காணொலி காட்சி மூலம் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். அப்போது, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர், தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்