லாரிகளுக்கு வேலையில்லை, வைக்கோல் வியாபாரத்தில் இறங்கிய லாரி உரிமையாளர்கள் - தேவை இருப்போரின் வீட்டில் இறக்குவதால் வரவேற்பு

லாரிகளுக்கு வேலை இன்றி போனதால் தொழிலை கைவிட மனமில்லாமல், வைக்கோல் வியாபாரத்தில் இறங்கியுள்ளனர் அதன் உரிமையாளர்கள்.

Update: 2020-03-03 08:25 GMT
தொழில் நிறைந்த நாமக்கல் பகுதியில் உள்ள லாரிகள் தற்போது வேலை இழந்து, வரிசைகட்டி நிற்கின்றன. இதனால், வருவாய் இழந்துள்ள உரிமையாளர்கள் பலர், லாரிகளை விற்றுவிட்டு மாற்றுத் தொழிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. எனினும், லாரிகளை விற்க மனமில்லாத உரிமையாளர்கள் பலர், அதை வைத்து வைக்கோல் வியாபாரத்தில் இறங்கியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் வறட்சி ஏற்பட்டதால், கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், லாரி உரிமையாளர்கள், வைக்கோல் அதிகம் கிடைக்கும், தஞ்சை, நாகை, திருவாரூர், கும்பகோணம் உள்ளிட்ட டெல்டா பகுதிகளுக்கு வந்து வைக்கோல்களை வாங்கிச் சென்று, சொந்த ஊரில் வியாபாரம் செய்கின்றனர். அனைத்து செலவுகளுடன் கட்டு ஒன்று160 ரூபாய்க்கு விற்பனையாவதாகவும், 300 ரூபாய் வரை உயரும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்