சீமை கருவேல மரங்களை அகற்ற கோரிய வழக்கு - தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சீமை கருவேல மரங்களால் நிலத்தடி நீருக்கு பாதிப்பில்லை என்ற நிபுணர் குழு அறிக்கையை, நீரி அமைப்பின் ஆய்வுக்கு உட்படுத்த, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-02-17 19:45 GMT
சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட முதன்மை வனபாதுகாவலர் தலைமையிலான நிபுணர் குழு அறிக்கையில், கருவேல மரங்களால் எதிர்மறை பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளதை சுட்டிகாட்டி, வைகோ தரப்பில் அறிக்கைக்கு ஆட்சேபனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், தேசிய மற்றும் சர்வதேச ஆய்வறிக்கைகளை நிபுணர் குழுவுக்கு அனுப்பி வைக்கவும், அந்த அறிக்கைகளை நீரி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுகொண்ட நீதிபதிகள், சீமை கருவேல மரத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தனது அறிக்கையும், மனுதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆய்வு அறிக்கைகளை தேசிய சுற்றுசூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டனர். மேலும், இந்த அறிக்கைகளை ஆய்வு செய்து, நீரி அமைப்பு அளிக்கும் அறிக்கையை நீதிமன்றத்தில் 3 மாதங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்