ஒரு தலை காதல் விவகாரம் - தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பலி

ராஜபாளையம் அருகே ஒரு தலை காதல் விவகாரத்தில் தீக்குளித்த இளைஞர் காதலர் தினமான நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;

Update: 2020-02-15 08:36 GMT
ராஜபாளையம் அருகே ஒரு தலை காதல் விவகாரத்தில் தீக்குளித்த இளைஞர், காதலர் தினமான நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சொக்கநாதன்புத்தூரை சேர்ந்த அருண்குமார் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தனது காதலை அந்த பெண் ஏற்க மறுத்ததால் மனமுடைந்த அவர், பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், மதுரை அரசு மருத்துவமனையில்,சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு, இளைஞரின் உடல் பெற்றோர் மற்றும் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்