பயங்கர ஆயுதங்களுடன் கொலை வெறி தாக்குதல் : ஊராட்சி தலைவர் மனைவி உள்பட பலர் படுகாயம்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு புடையூர் கிராமத்தில் வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கிராம மக்கள் மீது ஒரு கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்திய வீடியோ பரவி வருகிறது.;

Update: 2020-02-09 03:57 GMT
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு புடையூர் கிராமத்தில் வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கிராம மக்கள் மீது ஒரு கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்திய வீடியோ பரவி வருகிறது. சேத்தியாத்தோப்பு புடையூர் கிராமத்தில் வீட்டு மனை தொடர்பாக அழகேசன் என்பவருக்கும், குப்புசாமி தரப்புக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், குப்புசாமி தரப்பினர் ஜேசிபி இயந்திரம் கொண்டு அழகேசன் வீட்டை இடிக்க முயன்றுள்ளனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க, குப்புசாமி தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதலை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக குப்புசாமி , பரமசிவம், ஸ்டீபன், ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்