ராமேஸ்வரம் : குவித்துவைத்த மீன்கள் அழுகுவதால் நகரை சூழ்ந்த துர்நாற்றம்

இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களால், ராமேஸ்வரம் முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.

Update: 2020-01-19 09:12 GMT
இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களால், ராமேஸ்வரம் முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 300-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் சென்ற மீனவர்கள், தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி டன் கணக்கில் மத்தி ரக மீன்களை பிடித்துள்ளனர். அவற்றை ஏற்றுமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், மீன்கள் அழுகிய நிலையில் துறைமுகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், கடற்கரை மற்றும் ராமேஸ்வரம் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இதனிடையே, இரட்டைமடி வலைகளை பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்