இஸ்லாமியர்கள் கொண்டாடிய மாட்டுப்பொங்கல் விழா

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைபட்டியில் வீரகாளியம்மன் கோயிலில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இஸ்லாமியர்கள் சார்பில் மாட்டுபொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2020-01-16 21:09 GMT
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைபட்டியில் வீரகாளியம்மன் கோயிலில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இஸ்லாமியர்கள் சார்பில் மாட்டுபொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, கோயில் காளைக்கு அணிவிப்பதற்கான வேஷ்டி, துண்டுகள் உள்ளிட்டவற்றை ஜவுளி பொட்டலங்களாக சுமந்து வந்த இஸ்லாமியர்கள் அதை ஊர் மந்தைக்கு கொண்டு வந்தனர். பின்னர், கிராமத்தினருடன் சேர்ந்து வீரகாளியம்மன் கோவிலுக்கு சென்று ஒற்றுமையுடன் அம்மனை வழிபட்டனர். அதன் பிறகு, கோயில் காளைக்கு ஜவுளிபொட்டலங்கள் அணிவிக்கப்பட்டு காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்