முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு
முன்னாள் சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான பி.எச். பாண்டியன் காலமானார்.;
உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பி.எச்.பாண்டியன், இன்று உயிரிழந்தார். நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி பகுதியை சேர்ந்த பி.எச்.பாண்டியன், நெல்லை எம்.பியாகவும், அதிமுக அமைப்பு செயலாளராகவும் பணியாற்றி உள்ளார். சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு என்று பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தவர் பி.எச்.பாண்டியன்.எம்.ஏ. குற்றவியல் மற்றும் சட்ட விஞ்ஞான படிப்பும், எம்.எல். கிரிமினல் சட்ட படிப்பும் முடித்திருத்த பி.எச்.பாண்டியன், வழக்கறிஞராக திறம்பட பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு அதிமுக மற்றும் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.