முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் கொலை வழக்கு - முன்னாள் பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட 5 பேர் கைது

மேலூர் அருகே அமமுக நிர்வாகி கொலை வழக்கில் முன்னாள் பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2019-12-22 02:28 GMT
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த அ.வல்லாளபட்டியில் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவரும் அமமுக நிர்வாகியுமான அசோகன் கடந்த 19 ஆம் தேதி அதிகாலை நடைபயிற்சி சென்ற மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மேலவளவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் முன்னாள் பேரூராட்சி சேர்மன் உமாபதி, அடப்பு முருகேசன் மற்றும் மதுரையை சேர்ந்த பிரகாஷ், செல்வம் , பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், மேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அரசியல் முன்பகையால் கொலை நடந்ததாக அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்