இரு துருவங்கள் அரசியலில் இணையுமா?

திரைப்படத்துறையில் இரு துருவங்களாக இருந்த ரஜினி, கமல், அரசியல் தளத்தில் இருவரும் இணைவார்களா என எதிர்பார்க்கப்பட்டது.

Update: 2019-12-20 12:32 GMT
அரசியலுக்கு வருவது உறுதி.. இது காலத்தின் கட்டாயம் என நடிகர் ரஜினி காந்த் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழக அரசை விமர்சனம் செய்த கமல்,,  தாமும் அரசியலில் குதிக்கப்போவதாக அறிவித்து மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியையும் தொடங்கினார். இருவரும் அரசியலில் இணைந்து செயல்படுவார்களா என்று அவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தமிழ் நாட்டின் நலனுக்காக ரஜினியுடன் இணைந்து செயல்பட தயார் கமல்  அறிவித்தார். கமல் அறிவித்த உடனே, ரஜினியும் தமிழகத்தில் அதிசயம், அற்புதம் நடக்கும் என்று அறிவித்தார். தேவைப்பட்டால் அரசியலில் இருவரும் இணைந்து செயல்படலாம் என்றும் அவர் கூறினார். ரஜினியின் தீவிர ரசிகருமான நடிகர் ராகவா லாரன்சும், கமலையும், ரஜினியும் ஒரே மேடையில் பார்ப்பதால் ஏதே அதிசயம் நிகழப்போகிறது என்று தோன்றுவதாக கூறினார். இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தாமும், தமது மன்றத்தினரும்  பங்கேற்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினி அறிவித்தார். அதே நாளில் கமலும் உள்ளாட்சி தேர்தலில் நிற்கப்போவதில்லை என்று கூறினார். இந்த நிலையில் தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறி சட்டமானது. இந்த சட்டத்திருத்தத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், டெல்லியில் மாணவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டனர். இதனை கண்டித்து சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஆனால் இந்த விவகாரத்தில் தற்போது மௌனம் கலைத்த நடிகர் ரஜினி, நாடு முழுவதும் வன்முறை நடைபெறுவது மனதளவில் வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும், இந்தியர்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ரஜினியின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. கமல் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்த நிலையில், ரஜினியின் இந்த மாறுப்பட்டு கருத்து அரசியல் தளத்தில் இருவரும் இணைவார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்