மாட்டுத்தாவணி பூ சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்தது

மதுரை, மாட்டுத்தாவணி பூ சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் பூ சந்தையில் இரண்டாவது நாளாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

Update: 2019-12-01 13:11 GMT
மதுரை, மாட்டுத்தாவணி  பூ சந்தையில் இரண்டாவது நாளாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த பூ சந்தைக்கு திண்டுக்கல், நிலக்கோட்டை, ஓசூர் ஆகிய இடங்களில் இருந்தும், மதுரை சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில், தொடர் மழை காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த வாரம் 800 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லி பூ, தற்போது 3 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. கனகாம்பரம் விலை 3 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. தொடர் முகூர்த்த தினம் மற்றும் ஐயப்ப சீசன் ஆகியவற்றால் பூக்கள் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் கூறியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்