விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான வழக்கு : சென்னை மாநகராட்சிக்கு ரூ.25,000 அபராதம்

விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான வழக்கில் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-11-28 21:15 GMT
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான வழக்கில் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறி கட்டியுள்ள சொகுசு பங்களாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்குகள்,  நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முட்டுகாட்டில் விதியை மீறி கட்டப்பட்டுள்ள ஒரு தனியார் பங்களாவிற்கான மின்சாரம், தண்ணீர் இணைப்புகளை துண்டிக்க உத்தரவிட்டனர். மேலும் சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்