"என் வேகமே ஒரு நாள் என்னை கொல்லும்" - வாகனத்தில் எழுதிய வாசகம் உண்மையான சோகம்

அதிக வேகம் உயிருக்கு ஆபத்து என்பதை நமக்கு உணர்த்தும் விதமாக, சிதம்பரத்தில் இருசக்கர வாகன விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது

Update: 2019-11-26 19:13 GMT
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கு இருசக்கர வாகனம் ஓட்டுவதில் அலாதி பிரியம்..  தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்த ஆகாஷ் , சம்பவத்தன்று தனது நண்பர் ஏகேஷை அழைத்து கொண்டு கடலூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளார், 

சின்னாண்டிக்குழி என்ற கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது,  திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.. ஹெல்மெட் அணியாமல் இருந்த ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், அவருடன் சென்ற ஏகேஷ் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். இதில் சோகமான விஷயம் என்னவென்றால் , இருசக்கர வாகனத்தின் பின்பக்கத்தில், " என் வேகம் ஒரு நாள் என்னை கொல்லும், யாரும் அழ வேண்டாம் எல்லாம் முடிந்துவிட்டது " என்று ஆங்கிலத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கிறது, அவர் என்ன நினைத்து அப்படி ஒட்டினார் என அறியாத பெற்றோர், மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்