நிறம் மாறிய மேட்டூர் அணை நீரை தூய்மைப்படுத்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

மேட்டூர் அணை தண்ணீரை தூய்மைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-11-07 08:48 GMT
மேட்டூர் அணை தண்ணீரை தூய்மைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில்,  மேட்டூர் அணை நீர் நீல நிறமாக மாறி கடுமையாக துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளதாகவும்  காவிரியில் கர்நாடகம் கழிவுநீரை திறந்துவிடுவதே இதற்கு காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.  காவிரி நீர்  மாதிரியை ஆய்வு செய்து அதில் எந்த அளவுக்கு கழிவுகள் கலந்துள்ளன என்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். காவிரியில்  கர்நாடகம் கழிவு நீரை வெளியேற்றுவதை நிரந்தரமாக தடுக்கவும், இதுவரை காவிரியை அசுத்தப்படுத்தியதற்காக கர்நாடக அரசிடமிருந்து  உரிய இழப்பீட்டை பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்