காஞ்சியின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி : முழு கொள்ளளவில் 50 சதவீதத்தை எட்டியது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவில் 50 சதவீதத்தை எட்டியது.;
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவில் 50 சதவீதத்தை எட்டியது. கடந்த 3 நாட்களாக பெய்த மழையில் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. கிளியாறு மற்றும் தண்டராம்பேட்டை மடுவு கால்வாயில் இருந்து ஏரிக்கு தண்ணீர் தொடர்ந்து வருவதால், ஏரியின் முழு கொள்ளளவான 23.3 அடியில், தற்பொழுது 13.6 அடி நீர்வரத்து வந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.