ஒப்பந்த பணி முறைகேடு தொடர்பான வழக்கு : அமைச்சர் வேலுமணி பதிலளிக்க உயர்நீதிமன்றம் இறுதிக்கெடு

அரசு ஒப்பந்த பணி முறைகேடு தொடர்பான வழக்கில், அமைச்சர் வேலுமணி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இறுதிக்கெடு விதித்துள்ளது.;

Update: 2019-10-18 10:58 GMT
உள்ளாட்சித்துறை பணிகளுக்கு கோரப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, அறப்போர் இயக்கம், தி.மு.க சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதி  சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான, விசாரணை அதிகாரியான லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி சங்கர், முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய 3 மாதம் அவகாசம் கோரினார். இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்,  உத்தரவு பிறப்பித்து ஓராண்டு காலம் ஆகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றனர். இந்த வழக்கின் விசாரணையை லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி பொன்னி மேற்கொள்ள உத்தரவிட்டு, 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய அந்த துறையின் இயக்குநருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதுவரை பதிலளிக்காத அமைச்சர் வேலுமணிக்கு இறுதிக்கெடு விதித்து, விசாரணையை நவம்பர் 1ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்