இலவச மின்சாரம் பெற விடிய விடிய காத்திருப்பு : தட்கல் முறையில் மின்சாரம் பெற காத்திருந்த வி்வசாயிகள்
தமிழக அரசின் இலவச மின்சாரம் பெற, ஓசூர் மின்சார வாரிய அலுவலகம் முன்பு, விவசாயிகள் விடிய விடிய காத்திருந்திருந்தனர்.;
தமிழக அரசின் இலவச மின்சாரம் பெற, ஓசூர் மின்சார வாரிய அலுவலகம் முன்பு, விவசாயிகள் விடிய விடிய காத்திருந்திருந்தனர். வரிசையில் வரும் முதல் 120 விவசாயிகளுக்கு, தட்கல் முறையில், இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இன்று காலை சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, தட்கல் முறையில் மின்சாரம் வழங்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.